/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை உச்சிமாகாளியம்மன் கோயிலில் டிச.15ல் கும்பாபிஷேகம்
/
மானாமதுரை உச்சிமாகாளியம்மன் கோயிலில் டிச.15ல் கும்பாபிஷேகம்
மானாமதுரை உச்சிமாகாளியம்மன் கோயிலில் டிச.15ல் கும்பாபிஷேகம்
மானாமதுரை உச்சிமாகாளியம்மன் கோயிலில் டிச.15ல் கும்பாபிஷேகம்
ADDED : டிச 03, 2024 05:41 AM
மானாமதுரை : மானாமதுரை மெயின் பஜார் உச்சி மாகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக பணிக்காக கடந்த சில மாதங்களாக திருப்பணி நடைபெற்று வந்தன. பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்காக கோயில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு டிச. 14-ம் தேதி கணபதி ஹோமத்துடன் காலை 8:30 மணிக்கு முதலாம் கால யாக சாலை பூஜை ஆரம்பிக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு 15ம் தேதி காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:30 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 10:00 மணிக்கு மூலவர் உச்சிமாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. அபிஷேக, ஆராதனை, தீபாராதனை நடைபெற உள்ளன.
ஏற்பாடுகளை பரம்பரை பூஜாரிகள் ராமகிருஷ்ணன், கதிரேசன், உச்சிமாகாளியம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மானாமதுரை நகர மக்கள் செய்து வருகின்றனர்.