
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் கும்பாபிஷேக பணி தொடங்க இருப்பதால் கோபுரங்களை புதுப்பிக்க சாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இக்கோயிலில் 2002ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும், 23 வருடங்களாகியும் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்த நிலையில் கடந்த மாதம் கும்பாபிஷேக பணி தடையின்றி நடக்க ஜூலை 7ல் பாலாலயம் நடந்தது. கோயில் கோபுரங்கள், கோபுரங்களில் உள்ள சுதைகள் உள்ளிட்டவைகள் புதுப்பிக்கப்பட உள்ளன. இதற்காக கோயில் கோபுரம் முன் சாரம் அமைக்கப்பட்டு வருகிறது. கோயிலைச்சுற்றிலும் சாரம் கட்டிய பின் கும்பாபிஷேகத்திற்காக வர்ணம் தீட்டுவது, சேதமடைந்த சிற்பங்களை சரி செய்யும் பணி நடைபெறும்.