நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டையில் நித்திய கல்யாணி, கைலாசநாதர் கோயில் கும்பாபிேஷகம் நேற்று நடைபெற்றது.
இக்கோயில் புனரமைக்கப்பட்டு சபேஷ சிவாச்சாரியார் தலைமையில் கணபதி ேஹாமம் மற்றும் 6 கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர். மாலை மஹா அபிேஷகம், திருக்கல்யாணம் நடந்தது. இரவு சுவாமி புறப்பாடு நடந்தது.

