/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழைக்காலம் துவங்கியதால் கிராமத்தில் சுகாதாரம் கேள்விக்குறி; நிதி நெருக்கடியால் திணறும் கிராம ஊராட்சிகள்
/
மழைக்காலம் துவங்கியதால் கிராமத்தில் சுகாதாரம் கேள்விக்குறி; நிதி நெருக்கடியால் திணறும் கிராம ஊராட்சிகள்
மழைக்காலம் துவங்கியதால் கிராமத்தில் சுகாதாரம் கேள்விக்குறி; நிதி நெருக்கடியால் திணறும் கிராம ஊராட்சிகள்
மழைக்காலம் துவங்கியதால் கிராமத்தில் சுகாதாரம் கேள்விக்குறி; நிதி நெருக்கடியால் திணறும் கிராம ஊராட்சிகள்
UPDATED : ஆக 05, 2025 07:45 AM
ADDED : ஆக 05, 2025 06:36 AM

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களும், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவு பெற்றதை தொடர்ந்து தற் போது தனி அதிகாரிகள் கண்காணிப்பில் கிராம ஊராட்சிகள் உள்ளன.
உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியில் இருக்கும் போது கிராமப் பகுதிகளில் ஏற்படும் அடிப்படை பிரச்னைகளை உடனுக்குஉடன் கண்காணித்து வந்தனர். கடந்த 6 மாதங்களாக ஊராட்சிகளில் போதுமான நிதி இல்லாத காரணத் தினால் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில் ஊராட்சி பணியாளர்களுக்கு கூட உரிய தேதியில் சம்பளம் வழங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் இனி வரவுள்ள மழைக்காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படும் போது அதனை சரி செய்யவும் ஊராட்சிகளில் நிதியின்றி கிராமங்களில் நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:
உள்ளாட்சி பிரதிநிதி களின் பதவிக்காலம் முடிவு பெற்று 6 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் மீண்டும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் சாலை, குடிநீர், தெரு விளக்கு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. குடிநீர் வினியோகமின்றி வண்டிகளில் வரும் குடி நீரை குடம் ரூ.15 கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான கிராமங்களில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிற நிலையில் இரவில் வெளிச்சமின்றி இருளில் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகளிடம் கூறினால் அதனை சரி செய்ய மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தாமல் உள்ளதினால் காலதாமதம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதினால் தற்போது ஆங்காங்கே கிராமங்களில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் அதனை சரி செய்யக்கூடிய ஊழியர்கள் இன்றி கொசுத்தொல்லையால் இரவில் நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை. இதனால் ஆங்காங்கே டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்ய கோரி ஊராட்சி செய லாளர்கள் மற்றும் தனி அதிகாரிகளிடம் தெரிவித்தால் போதிய நிதி இல்லை என்கின்றனர். நகர்ப்புறங்களை ஒட்டி உள்ள கிராம ஊராட்சி பகுதிகளை அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சிகளோடு இணைக்கும் திட்டமும் கிடப்பில் உள்ளதால் அப்பகுதியிலும் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப் படாமல் உள்ளது.
கிராம ஊராட்சிக்கு நிதி ஒதுக்கவும் இது குறித்து ஊராட்சி செயலாளர்கள் கூறிய தாவது:
உள்ளாட்சிகளில் போதிய நிதி இல்லாத காரணத்தினால் ஊராட்சி பணியாளர்களுக்கு கூட சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால் ஆங்காங்கே தேங்கும் மழைநீர் மற்றும் கழிவு நீரை வெளியேற்ற போதிய நிதி ஒதுக்குமாறும், தற்காலிக பணியாளர்களை நியமிக்கவும் தெரிவித்து உள்ளோம், என்றனர்.