/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு: சுப்பன் கால்வாய் கரையில் ரோடு அமைக்கப்படுமா
/
மானாமதுரையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு: சுப்பன் கால்வாய் கரையில் ரோடு அமைக்கப்படுமா
மானாமதுரையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு: சுப்பன் கால்வாய் கரையில் ரோடு அமைக்கப்படுமா
மானாமதுரையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு: சுப்பன் கால்வாய் கரையில் ரோடு அமைக்கப்படுமா
UPDATED : அக் 28, 2025 04:52 AM
ADDED : அக் 28, 2025 03:46 AM

மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு களிலும் அதனை ஒட்டிய விரிவாக்க பகுதிகளிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள் நகரை ஒட்டிய பகுதிகளில் புதிதாக வீடுகளை கட்டி வருகின்றனர். இதனால் மானாமதுரையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பஸ் ஸ்டாப், காந்தி சிலை, தேவர் சிலை, பழைய அரசு மருத்துவமனை மற்றும் அண்ணாதுரை சிலை, மெயின் பஜார், பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பள்ளி,கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், அரசு ஊழியர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மேலும் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரயில்வே கேட் ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் அடைக்கப்படுவ தாலும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் மானாமதுரை நகருக்குள் வருவதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் மானாமதுரை ஆனந்த வல்லி அம்மன் கோயில் எதிர்புறம் வைகை ஆற்றின் கரைகளின் இரு புறங் களிலும் 15 வருடங்களுக்கு முன்பு பனிக்கனேந்தலில் தடுப்பணை கட்டும்போது ரோடு அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தடுப்பணை கட்டும் பணி முடிந்தவுடன் ரோடு போடாமல் அப்பணி அத்தோடு கிடப்பில் போடப்பட்டது.
மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே செல்லும் சுப்பன் கால்வாய் இரு கரைகளிலும் 30 வருடங்களுக்கு முன்பு ரோடு இருந்த நிலையில் தற்போது அண்ணாமலை நகர், அன்பு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் அந்த ரோடும் மறைந்து தற்போது ஒத்தையடி பாதையாக மாறி உள்ளதை நகராட்சி நிர்வாகமும், பொதுப்பணித்துறை நிர்வாகமும் இணைந்து இந்த ரோடுகளில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி புதிதாக ரோடு அமைத்தால் மானாமதுரை நகர்ப் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும் வாய்ப்பு உள்ளது.
பொதுமக்கள் கூறிய தாவது:
மானாமதுரை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை தொடர்ந்து வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளதால் ஆங்காங்கே தினம் ஏற்படும் நெரி சலால் சிரமப்படுகிறோம்.
அண்ணாதுரை சிலை, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ரயில்வே கேட் அடைக்கப்பட்டால் நகர்ப் பகுதியில் கி.மீ., கணக்கில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.இப்பகுதியில் மேம்பாலங்கள் அமைப்பதாக அரசியல் கட்சியினர் 30 வருடங்களாக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வைகை ஆற்றின் இரு கரைகள், சுப்பன் கால்வாய் கரை பகுதிகளில் ரோடு அமைத்தால் சிவகங்கை ரோட்டில் இருந்து தாயமங்கலம் ரோட்டிற்கு செல்பவர்கள் எளிதில் செல்ல முடியும்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

