/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
l காரைக்குடி மாநகராட்சிக்கான மாஸ்டர் பிளான்' தயார்; l அடுத்த 20 ஆண்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டம்
/
l காரைக்குடி மாநகராட்சிக்கான மாஸ்டர் பிளான்' தயார்; l அடுத்த 20 ஆண்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டம்
l காரைக்குடி மாநகராட்சிக்கான மாஸ்டர் பிளான்' தயார்; l அடுத்த 20 ஆண்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டம்
l காரைக்குடி மாநகராட்சிக்கான மாஸ்டர் பிளான்' தயார்; l அடுத்த 20 ஆண்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டம்
ADDED : ஆக 15, 2024 04:47 AM
தமிழக அரசு, காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளது. இதற்காக காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகள் மட்டுமின்றி, கோட்டையூர், கண்டனுார் பேரூராட்சி, சங்கராபுரம், கோவிலுார், இலுப்பக்குடி, மானகிரி ஊராட்சியில் தளக்காவூர் ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து, மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது. இந்த பணிகளை செய்வதற்காக மாநகராட்சி கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார். படிப்படியாக எல்கை விரிவாக்கத்திற்கு பின் வரும் வார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் காரைக்குடி மாநகராட்சி செயல்பட உள்ளது.
காரைக்குடிக்கு மாஸ்டர் பிளான்'
இந்நகரை மாநகராட்சி அந்தஸ்திற்கு தரம் உயர்த்தும் நோக்கில், அடுத்த 20 ஆண்டுக்கு தேவையான முழு வளர்ச்சி பெற்றிடும் நோக்கில், நகர் ஊரமைப்பு துறை (டி.டி.சி.பி.,) துறை சார்பில் மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நகரில் வீடு கட்ட, கல்வி நிறுவனம், சாலை வசதி, விவசாயத்திற்கு, தொழிற்சாலைக்கான இடம் என பிரிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் காரைக்குடி மாநகராட்சி மக்களின் பொருளாதார, தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து இந்த மாஸ்டர் பிளான்' தயாரித்துள்ளனர். இதன் மூலம் அடுத்த 20 ஆண்டிற்கு இந்நகருக்கு தேவைப்படும் சாலை போக்குவரத்து, பொது அடிப்படை வசதிகள், பொழுது போக்கு அம்சங்கள் என அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேற்றும் விதமாக திட்டம் இருக்கும்.
மாஸ்டர் பிளான்' திட்ட நோக்கம்
மாநகராட்சி எல்கைக்குள் குடியிருப்பு, தொழிற்சாலை, பசுமை பகுதியான விவசாயம், கல்வி நிறுவனங்கள், போக்குவரத்திற்குரிய சாலை வசதி என அனைத்து திட்டங்களும், மாஸ்டர் பிளானில்' உள்ளபடி நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக சிவகங்கை நகர் ஊரமைப்பு துறை சார்பில் வெப்சைட்' ஒன்று வெளியிடப்பட உள்ளது.
அந்த வெப்சைட்டை பொது மக்கள் பார்த்தால், காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வரையறுக்கப்பட்ட முழு நில உடமைக்கான திட்டங்கள் தெரியவரும். இதன் மூலம் எதிர்காலத்தில் இங்கு செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளலாம். இந்த நோக்கத்திற்காகவே மாஸ்டர் பிளான்' தயாரித்துள்ளனர்.