/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் ரூ.39 கோடி குடிநீர் திட்டப்பணி: நிதி வந்தால் தான் தோண்டிய ரோடு சீராகுமாம்
/
மானாமதுரையில் ரூ.39 கோடி குடிநீர் திட்டப்பணி: நிதி வந்தால் தான் தோண்டிய ரோடு சீராகுமாம்
மானாமதுரையில் ரூ.39 கோடி குடிநீர் திட்டப்பணி: நிதி வந்தால் தான் தோண்டிய ரோடு சீராகுமாம்
மானாமதுரையில் ரூ.39 கோடி குடிநீர் திட்டப்பணி: நிதி வந்தால் தான் தோண்டிய ரோடு சீராகுமாம்
ADDED : ஏப் 01, 2025 06:20 AM

மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் 4500க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள்மூலம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக ராஜ கம்பீரம் அருகே வைகை ஆற்று பகுதியில் உறை கிணறு, போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டதால் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் நகராட்சி நிர்வாக துறை சார்பில் ஒரு வருடத்திற்கு முன் ரூ.39 கோடி செலவில் புதிய குடிநீர் திட்ட பணியை முதல்வர்ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
தற்போது மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் விரிவாக்க பகுதிகளில் இப்பணியை ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தினர் புதிய குடிநீர் திட்ட பணிகளுக்காக ரோடுகளை தோண்டி குழாய் பதிக்கும் பணியை மந்த கதியாக செய்து வருகின்றனர்.
குழாய் பதிப்பதற்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட ரோடுகளை முறையாக மூடாமல் சிமென்ட் கலவைகளை ஊற்றி மூடியுள்ளதால் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குடிநீர் குழாய் பதிக்கும்பணியை முறையாக முடிக்காமல் மற்றொரு பகுதியில் பணிகளை ஆரம்பித்து விடுவதால் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும்ரோடு தோண்டப்பட்டு ஆங்காங்கே மேடு,பள்ளங்களாக காட்சி அளித்து வருகின்றன.
மாவட்டம் நிர்வாகம் மானாமதுரை நகராட்சி பகுதியில் நடைபெறும்புதிய குடிநீர் திட்ட பணியை விரைவில் முடித்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நகராட்சி பொறியாளர் பட்டு ராஜன் கூறியதாவது:
புதிய குடிநீர் திட்டப்பணி தற்போது 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. திட்டத்தை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் மேலும் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிதாக 2 இடத்தில் குடிநீரேற்று நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.மேலும் 3 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன.
குழாய்கள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட ரோடுகளை புதிதாக போடுவதற்கு ரூ.15.86 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.நகராட்சி பகுதிகளை ஒட்டியுள்ள ஊரகப் பகுதிகளிலும் குடிநீர் இணைப்பு வழங்க மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று நகராட்சிக்கு வரி செலுத்திய பிறகு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

