/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மக்களுக்கு பயன்படும்வகையில் தெப்பக்குளம்; அகற்றப்படாத குப்பையால் மாசுபடுகிறது
/
மக்களுக்கு பயன்படும்வகையில் தெப்பக்குளம்; அகற்றப்படாத குப்பையால் மாசுபடுகிறது
மக்களுக்கு பயன்படும்வகையில் தெப்பக்குளம்; அகற்றப்படாத குப்பையால் மாசுபடுகிறது
மக்களுக்கு பயன்படும்வகையில் தெப்பக்குளம்; அகற்றப்படாத குப்பையால் மாசுபடுகிறது
ADDED : மார் 23, 2025 06:48 AM
சிவகங்கை: சிவகங்கை தெப்பக்குளம் மக்களுக்கு பயன்படும் வகையிலும், அகற்றப்படாத குப்பைகளால் மாசு அடைவதில் இருந்தும் உயிர்பெறுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகங்கையில் பாரம்பரிய தெப்பக்குளம் உரிய பராமரிப்பின்றி சாக்கடை, பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி காணப்படுகிறது. அரண்மனை அருகே மன்னர் காலத்தில் செம்பூரான் கற்களை கொண்டு 5 ஏக்கரில் தெப்பக்குளம்கட்டினர். அன்றைய காலத்தில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் கிணறு அமைத்து அதில் இருந்து அரண்மனை நீச்சல் குளத்திற்கு தண்ணீர் சென்றுள்ளது.
பருவ மழை காலங்களில் பெய்யும் மழை நீர் வரத்து கால்வாய் வழியாக தெப்பக்குளத்தை நிரப்பின. இதன் மூலம் சிவகங்கை நகரில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கப்பட்டது.
இத்தெப்பக்குளத்தை நகராட்சி பராமரிப்பில் ஒப்படைத்தனர். 1996ம் ஆண்டு சிதிலமடைந்த தெப்பக்குள சுற்றுச்சுவர்களை சீரமைத்து அப்போதைய தி.மு.க., அமைச்சர் தா.கிருஷ்ணன்முயற்சியால் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து சேர்த்தனர்.
அதற்கு பின் 2018ல் அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன் முயற்சியால் மீண்டும் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தெப்பக்குளத்தை நிரப்பினர். அக்கால கட்டத்தில் நிரப்பிய தண்ணீர் தான் தொடர்ந்து வற்றாமல் தெப்பக்குளம் தண்ணீரால் நிரம்பியுள்ளது.
தொடர்ந்து இந்த தெப்பக்குளத்தை பராமரிக்காமலும் பாதுகாக்காமலும் விட்டு விட்டனர். இதனால் தெப்பக்குளத்திற்கு செட்டியூரணியில் இருந்து வரும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் சுருங்கிவிட்டது. அக்கால்வாயில் மழைநீர் செல்லாமல் வீடுகள், ஓட்டல், வர்த்தக நிறுவனங்களில் சேகரமாகும் கழிவு நீரை விட்டனர். அக்கழிவு நீர் தெப்பக்குளத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
கலெக்டர் ஆஷா அஜித் தெப்பக்குளத்தில் உள்ள நீராதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், தனி கவனம் செலுத்தி தெப்பக்குள தடுப்பு சுவர்களை கட்டி, கழிவு நீரில் கலக்காத வகையிலும் தெப்பகுளத்தில் தெற்கு பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தி மீண்டும் தெப்பக்குள நீரை மக்கள்பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.