/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இன்றி மாணவர்களின் கல்வி பாதிப்பதாக பெற்றோர்
/
அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இன்றி மாணவர்களின் கல்வி பாதிப்பதாக பெற்றோர்
அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இன்றி மாணவர்களின் கல்வி பாதிப்பதாக பெற்றோர்
அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இன்றி மாணவர்களின் கல்வி பாதிப்பதாக பெற்றோர்
ADDED : ஆக 12, 2025 06:49 AM

மானாமதுரை: மானாமதுரை தாலுகாவில் பல அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால் மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். மானாமதுரை அருகே வேதியரேந்தல், மேலநெட்டூர், கல்குறிச்சி, பறையன்குளம், மேலப்பசலை, மிளகனுார், மூங்கில் ஊரணி, கல்லுாரணி ஆகிய ஊர்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மிளகனுார், மேலநெட்டூர், கல்குறிச்சி, கல்லுாரணி ஆகிய பள்ளிகளில் சில வருடங்களாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதேபோன்று சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 63 அரசு உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.
அரசு உயர்நிலைப் பள்ளி களில் தினந்தோறும் ஆசிரியர்களின் நட வடிக்கை, வகுப்பறைகளில் மாணவர்களின் செயல்பாடு, விளையாட்டில் மாணவர்களை ஈடுபடுத்துவது, மேலும் பள்ளிக்குத் தேவையான வளர்ச்சி பணிகளை செய்ய பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் கிராம மக்களுடன் அடிக்கடி கூட்டம் நடத்துதல், பள்ளி வரவு,செலவு கணக்குகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அரசு உயர்நிலை பள்ளி களில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால் மேற்கண்ட பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வித் திறமை பாதிக்கப்பட்டு வருகிறது.
பெற்றோர்கள் கூறிய தாவது:
மானாமதுரையில் பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாததால் பள்ளிகளில் அன்றாடம் நடக்கவேண்டிய பணிகள் நடைபெறாமல் உள்ளது. ஒரு சில பள்ளிகளில் அங்கு ஆசிரியர்களாக பணியாற்று பவர்கள் பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக உள்ளனர்.
ஓய்வு தலைமை ஆசிரியர்களுக்கு பதிலாக புதிய தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யாதது குறித்து கல்வித்துறை அதிகாரி களுக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடமும் இல்லாத காரணத்தினால் பள்ளியில் தகராறு செய்யும் மாணவர்களையும், தாமதமாக வருபவர்களையும் கண்டிக்க முடியவில்லை. மாணவர்களின் விளையாட்டு திறனும், ஒழுக்கமும் பாதிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம் மானாமதுரையில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.