ADDED : மார் 19, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.5,000 பென்ஷன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் பாரதிய மஸ்துார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சங்க மாவட்ட தலைவர் நாகலிங்கம் தலைமை வகித்தார். குகன் முன்னிலை வகித்தார். பாரதிய மஸ்துார் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், சட்ட ஆலோசகர் விக்ரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பென்ஷன் பாதுகாப்பு நிதி உச்சவரம்பை ரூ.30,000 ஆகவும், சம்பள உச்சவரம்பை ரூ.42,000 ஆகவும் உயர்த்த வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோரிக்கை மனுவை கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துக்கழுவனிடம் வழங்கினர்.