ADDED : பிப் 29, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, - காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரியில், கல்லுாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ஆய்வக கட்டட திறப்பு விழா நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். முதல்வர் பெத்தாலட்சுமி வரவேற்றார்.
இதில் முன்னாள் அமைச்சர் தென்னவன், காரைக்குடி துணைச் சேர்மன் குணசேகரன், துறைத்தலைவர் முருகேசன், கோமளவள்ளி, உதய கணேசன், சந்திரசேகரன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

