/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலைக்கிராமம், இளையான்குடியில் போலீஸ் பற்றாக்குறை தொடர் திருட்டு அதிகரிப்பு

ADDED : மார் 04, 2024 05:17 AM
சாலைக்கிராமம்; சாலைக்கிராமம், இளையான்குடி போலீஸ் ஸ்டேஷன்களில் போலீஸ் எண்ணிக்கை குறைவால் திருட்டு அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இளையான்குடி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளை சேர்ந்த கிராமப் பகுதிகளும், ஒரு பேரூராட்சி பகுதியும் உள்ளது.
இப்பகுதிகளை சேர்ந்த மக்களின் பாதுகாப்பிற்காக இளையான்குடி, சாலைக்கிராமம் ஆகிய ஊர்களில் 2 போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சாலைக்கிராமம், இளையான்குடி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் தற்போது போதிய போலீசார் இல்லாமல் காலி பணியிடங்கள் அதிகமாக இருப்பதினால் இரவு ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் போலீசார் பற்றாக்குறையாக உள்ளதால் சாலை கிராமம் பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
நேற்று முன் தினம் இரவு கூட சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடையை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது. இதுபோன்று அடிக்கடி இப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் உள்ளதால் பணிச்சுமை காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே மாவட்ட எஸ்.பி. சாலைக்கிராமம், இளையான்குடி போலீஸ் ஸ்டேஷன்களில் கூடுதல் போலீசார் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.