/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி மின்வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை! பணியில் மந்த நிலையால் நுகர்வோர் அவதி
/
காரைக்குடி மின்வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை! பணியில் மந்த நிலையால் நுகர்வோர் அவதி
காரைக்குடி மின்வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை! பணியில் மந்த நிலையால் நுகர்வோர் அவதி
காரைக்குடி மின்வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை! பணியில் மந்த நிலையால் நுகர்வோர் அவதி
ADDED : ஏப் 26, 2024 12:53 AM
காரைக்குடி : காரைக்குடி மின்வாரிய அலுவலகத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையால்மின்சார பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
காரைக்குடி மின்வாரிய அலுவலகத்தின் கீழ் காரைக்குடி வடக்கு, தெற்கு, கிராமப்புறம் கானாடுகாத்தான், புதுவயல், கல்லல் கண்டரமாணிக்கம், தேவகோட்டை நகர் தேவகோட்டை கிராமப்புறம் உள்ளிட்ட பிரிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இதில், ஒரு லட்சத்து 85 ஆயிரம் வீடுகள் 30 ஆயிரம் கடைகள், 3 ஆயிரத்து 500, தற்காலிக இணைப்பு 4 ஆயிரத்து 200 விவசாய இணைப்புகள், 2 ஆயிரத்து 300 அரசு இணைப்புகள், 5 ஆயிரத்து 200 தெரு விளக்கு, மற்றும் குடிநீர் தொட்டி இணைப்புகள் உட்பட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளன. 20 ஆயிரம் இணைப்புகளுக்கு ஒரு பகுதி மின் அலுவலகம் இருக்க வேண்டும். ஆனால், 40 ஆயிரம் இணைப்புகளுக்கு ஒரு பகுதி மின் அலுவலகம் செயல்படுகிறது.
ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு உதவி செயற்பொறியாளர்,போர்மேன்,ஹெல்பர் மற்றும் கேங்மேன் இருக்க வேண்டும். இதற்கு முன்பு ஒவ்வொரு பகுதி அலுவலகத்திற்கும் 10 ஹெல்பர்கள் 10 வயர் மேன்கள் பணியில் இருந்தனர்.
ஆனால் தற்போது ஒவ்வொரு பகுதிக்கும் கேங்மேன் மட்டுமே பணியில் உள்ளனர். வயர்மேன் ,ஹெல்பர் பணியிடம் காலியாக உள்ளது.
போதுமான கேங்மேன் இல்லாததோடு, கேங்மேன்கள் அனைத்து பணிகளையும் செய்ய வேண்டியுள்ளதால் சிரமம் ஏற்படுகிறது.
வீடுகளில் ஏற்படும் மின்தடை, புதிய மின் இணைப்பு பணி உட்பட சாதாரண மின் பணிகளில் தொய்வு ஏற்படுவதோடு, மழை புயல் போன்ற இயற்கை இடர்பாடு காலங்களில் மின் பணி மொத்தமாக ஸ்தம்பிக்கும் நிலையும் உருவாக வாய்ப்பு உள்ளது.
மேலும் மின்வாரிய அலுவலகத்தில் ஆள் குறைப்பு நடந்து வருவதால் பணிகளிலும் மந்த நிலை ஏற்பட்டு வருகிறது. அந்தந்த பகுதிக்கு கேங்மேன் இருந்தாலும் வயர்மேன், ஹெல்ப்பர்களை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
செயற்பொறியாளர் லதாதேவி கூறுகையில்: பணிக்கு போதுமான ஆட்கள் உள்ளனர். கூடுதல் டிரான்ஸ்பார்மர் மூலம் மின் இணைப்பு முறையாக வழங்கப்பட்டு வருகிறது. ஆள் பற்றாக்குறை ஏற்பட்டால் தனியார் கான்ட்ராக்ட் மூலம் ஆட்களை பயன்படுத்தி வருகிறோம். ஆள் பற்றாக்குறை தற்போது இல்லை. வயர் மேன்கள் பார்த்த பணியை தற்போது கேங்மேன்களே பார்த்து விடுகின்றனர். அவர்களுக்கும் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது. அலுவலகம் கணினி மயமாவதால் ஆள் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர, சிலர் மருத்துவ விடுப்பில் உள்ளனர். சிலர் பணி ஓய்வு பெற்று விட்டனர் என்றார்.

