/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இருட்டில் லாடனேந்தல் மயானம்; இறுதி சடங்கு செய்ய முடியாமல் தவிப்பு
/
இருட்டில் லாடனேந்தல் மயானம்; இறுதி சடங்கு செய்ய முடியாமல் தவிப்பு
இருட்டில் லாடனேந்தல் மயானம்; இறுதி சடங்கு செய்ய முடியாமல் தவிப்பு
இருட்டில் லாடனேந்தல் மயானம்; இறுதி சடங்கு செய்ய முடியாமல் தவிப்பு
ADDED : ஆக 18, 2025 11:44 PM
திருப்புவனம்: லாடனேந்தல் பொது மயானத்தில் விளக்கு இல்லாததால் இறுதி சடங்கு செய்ய வரும் மக்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
லாடனேந்தலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வைகை ஆற்றை ஒட்டி பொது மயானம் உள்ளது. லாடனேந்தலில் உயிரிழந்தவர்களை எரிக்கவும், அடக்கம் செய்யவும் இந்த மயானத்திற்கு தான் வருகின்றனர். மயானத்தில் விளக்கு இல்லை, ஓரளவிற்கு வசதியான வர்கள் வாடகைக்கு விளக்கு வாங்கி பயன் படுத்த வேண்டியுள்ளது.
கிராம மக்கள் கூறுகையில், ஒன்றே கால் பரப் பளவில் இருந்த மயானம் பெத்தானேந்தல் பாலப் பணிக்காக 40 சென்ட் பரப்பளவை எடுத்து கொண்டனர். பாலப் பணிக்காக மயானத்திற்கு முன்புறம் ஐந்து அடி உயரத்திற்கு மேடாக்கி விட்டனர். இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு வந்து இறக்க முடியவில்லை.
இயந்திரங்களை வைத்து பள்ளம்தோண்டி இறங்க வேண்டி யுள்ளது. மயானத்தில் எந்த விளக்குகளும் எரிவதில்லை. இதனால் இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம், பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை, என்றனர்.