/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முள்படுக்கையில் பெண் சாமியார் தவம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
/
முள்படுக்கையில் பெண் சாமியார் தவம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
முள்படுக்கையில் பெண் சாமியார் தவம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
முள்படுக்கையில் பெண் சாமியார் தவம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜன 04, 2024 12:58 AM

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோயிலில் சாமியார் நாகராணி முள் படுக்கையில் படுத்து தவம் செய்தார். பக்தர்கள் தரிசனம் செய்து அவரிடம் அருளாசி பெற்றனர்.
லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி 18 ல் நாகராணி விரதம் இருந்து முள்படுக்கையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது வழக்கம். இக்கோயில் மண்டலாபிஷேகத்தையொட்டி நடக்கும் இந்நிகழ்வில் சாமியாரிடம் அருளாசி வாங்க பெண்கள் கூட்டம் அதிகம் திரளும். இந்தாண்டு இவ்விழா கடந்தாண்டு டிசம்பரில் துவங்கியது.
லாடனேந்தலைச் சுற்றியுள்ள காடுகளில் இருந்து முட்களை கொண்டு வந்து ஏழு அடி உயரத்திற்கு படுக்கை அமைக்கப்பட்டது. முத்துமாரியம்மன், விநாயகர் உள்ளிட்டோரை தரிசனம் செய்த பின் முள்படுக்கைக்கு சிறப்பு பூஜை செய்து புண்ணிய தீர்த்தம் தெளித்தபின் அதில் ஏறி நின்று நாகராணி சாமியாடி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
ஏற்பாடுகளை மாரிமுத்து சுவாமிகள், முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் செய்தனர்.