/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்
/
மானாமதுரையில் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்
ADDED : அக் 26, 2025 06:41 AM

மானாமதுரை: நெருங்கி வரும் திருக்கார்த்திகை பண்டிகைக்காக மானாமதுரையில் மண்ணாலான விளக்குகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்டப் பொருட்களை தயார் செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்கள் தரமாகவும் உறுதியாகவும் இருப்பதினால் அதிக கிராக்கி உள்ளது.
வருகிற டிச.3ம் தேதி வரவுள்ள திருக்கார்த்திகை பண்டிகைக்காக மானாமதுரையில் அகல்விளக்கு, கிளியாஞ் சட்டிகள், சரவிளக்கு, தேங்காய் முக விளக்கு, சுவாமி விளக்கு, பஞ்சமுக விளக்கு என பல்வேறு வகையான விளக்குகளை ரூ. 1 முதல் ரூ.800 வரையிலான அளவிற்கு தயார் செய்து வருகின்றனர்.
மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: கடந்த சில வாரங்களாக திருக்கார்த்திகைக்காக விளக்குகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
தொடர்ந்து மழை பெய்து வருவதினால் விளக்குகள் தயாரிக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டு வந்தாலும் ஆர்டர்கள் அதிகளவில் உள்ளதால் தீவிரமாக விளக்குகளை தயார் செய்து வருகிறோம் என்றனர்.

