ADDED : செப் 28, 2025 06:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளி நாதர் கோயிலில் சிவகாமி அம்மன் சன்னதியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
இக்கோயிலில் செப்.23ல் நவராத்திரி விழா துவங்கியது. தொடர்ந்து தினசரி சிவகாமி அம்மன் மூலவருக்கு அலங்காரம் நடந்து தீபாராதனை, திருநாள் மண்டபத்தில் உற்ஸவ அம்மன் எழுந்தருளி அலங்காரத்தில் எழுந் தருள தீபாராதனை நடந்து வருகிறது. நேற்று அம்மன் சன்னதியில் திருவிளக்குப் பூஜை நடந்தது.
மூலவர் சிவகாமி அம் மனுக்கு சிறப்பு அபி ஷேகம் நடைபெற்று வரா கி யம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பெண்கள் குத்துவிளக்கேற்றி பூஜை செய்தனர்.