/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழைக்காலத்தில் மூழ்கும் தரைப்பாலம் கிராம மக்கள், மாணவர்களுக்கு சிரமம்
/
மழைக்காலத்தில் மூழ்கும் தரைப்பாலம் கிராம மக்கள், மாணவர்களுக்கு சிரமம்
மழைக்காலத்தில் மூழ்கும் தரைப்பாலம் கிராம மக்கள், மாணவர்களுக்கு சிரமம்
மழைக்காலத்தில் மூழ்கும் தரைப்பாலம் கிராம மக்கள், மாணவர்களுக்கு சிரமம்
ADDED : நவ 02, 2024 09:07 AM

காரைக்குடி : கல்லல் அருகே களத்திப்பட்டியில் மழைக்காலங்களில் தண்ணீரில் மூழ்கும் தரைப்பாலத்தால் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
கல்லலில் இருந்து பனங்குடி வழியாக நாட்டரசன்கோட்டை, சிவகங்கை செல்லும் சாலை உள்ளது.
காரைக்குடியில் இருந்து சிவகங்கைக்கும் சிவகங்கையிலிருந்து காரைக்குடிக்கு செல்லும் அரசுப் பணியாளர்கள், மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் இந்த ரோட்டை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
கல்லல், இந்திரா நகர், முத்துப்பட்டி, களத்திப்பட்டி, திருத்திப்பட்டி, பனங்குடி, நடராசபுரம் செல்லும் ரோட்டில் தரைப்பாலம் ஒன்று அமைந்துள்ளது.
சறுகனி ஆற்றின் குறுக்கே பனங்குடி மற்றும் களத்திப்பட்டி நடுவே இப்பாலம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் தண்ணீர் அதிகம் செல்வதால் பொதுமக்கள் இந்தப் பாலத்தை பயன்படுத்த முடிவதில்லை. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உட்பட பலரும் பல மைல் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
பா.ஜ., மாநில விவசாய அணி திட்ட பொறுப்பாளர் மதிமோகன் கூறுகையில்:
மதகுபட்டியில் தொடங்கும் சருகணி ஆறு இவ்வழியாக ராமநாதபுரம் மாவட்டம் வரை செல்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டது.
மழைக் காலங்களில் பாலத்தில் அதிகம் தண்ணீர் செல்வதால் பாலத்தில் பயணம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. மக்கள் பல மைல் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
புதிய மேம்பாலம் அமைக்க தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. புதிய பாலம் கட்டுவதாக அறிவிப்பு வந்த இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை. மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோரின் நலம் கருதி விரைவில் பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

