/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி மாநகராட்சியில் நில வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயம்
/
காரைக்குடி மாநகராட்சியில் நில வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயம்
காரைக்குடி மாநகராட்சியில் நில வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயம்
காரைக்குடி மாநகராட்சியில் நில வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயம்
ADDED : அக் 01, 2025 10:06 AM
சிவகங்கை : காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நிலங்களை பத்திரப்பதிவு செய்யும் போது குறைந்த பட்ச வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயம் செய்துள்ளதால், இது குறித்து ஆட்சேபணை இருந்தால் புகராக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான காரைக்குடி நகரம், கண்டனுார், கோட்டையூர் பேரூராட்சி பகுதிகள், சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கழனிவாசல், செக்காலை, செஞ்சை, கோவிலுார் மற்றும் இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலங்களை பதிவு செய்வதற்கான வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயம் செய்துள்ளனர்.
ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப சதுர மீட்டருக்கு வசூலிக்கப்பட்ட பழைய வழிகாட்டி மதிப்பீடு தொகையில் இருந்து, 30 சதவீத தொகையை உயர்த்தியுள்ளனர். காரைக்குடி, திருப்புத்துார் பகுதிக்கு உட்பட பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகங்களில் புதிய வழிகாட்டி மதிப்பீடு படி கட்டணம் வசூலிக்க உள்ளனர்.
காரைக்குடி, திருப்புத்துார் பத்திரபதிவு சார்பதிவாளர் அலுவலக எல்கைக்கு உட்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகள், தெருக்கள் மற்றும் சர்வே எண்களுக்கு ஏற்ப கூட்டு மதிப்பு தொகையில் நிர்ணயித்து அது குறித்த விபரங்களை அந்தந்த தாசில்தார் , காரைக்குடி பத்திரப்பதிவு துறை மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.கலெக்டர் பொற்கொடி கூறியதாவது: குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பீடு தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சேபணை இருந்தால் 15 நாட்களுக்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மதிப்பீட்டு துணை குழுவிடம் நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு பத்திரப்பதிவு காரைக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றார்.