/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவில் அருகே ரூ.3 லட்சம் வழிப்பறி
/
காளையார்கோவில் அருகே ரூ.3 லட்சம் வழிப்பறி
ADDED : அக் 01, 2025 10:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : காளையார்கோவில் அருகே சிலுக்கபட்டி அமல்ராஜ் மகன் ஆரோக்கியசாமி 37. இவர் டூவீலரில் ரூ.3 லட்சத்துடன் சிலுக்கப்பட்டியில் இருந்து காளையார்கோவிலுக்கு சென்றார்.
காலை 11:20 மணிக்கு வாகைகுளம் பஸ் ஸ்டாப் அருகே செல்லும் போது நம்பர் இல்லாத டூவீலரில் பின்னால் வந்தவர்கள் ஆரோக்கியசாமியை வழிமறித்து மிரட்டி அவர்களின் டூவீலரை அங்கேயே விட்டு விட்டு ஆரோக்கியசாமி டூவீலரையும் அவர் கொண்டு வந்த ரூ.3 லட்சத்தையும் வழிப்பறி செய்து தப்பினர்.ஆரோக்கியசாமி காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார்.