/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு மருத்துவமனையில் லேப்ராஸ்கோபி கருவி மீட்பு
/
அரசு மருத்துவமனையில் லேப்ராஸ்கோபி கருவி மீட்பு
ADDED : அக் 26, 2024 05:04 AM
காரைக்குடி: காரைக்குடி அரசு மருத்துவமனையில், ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு லேப்ராஸ் கோப்பி மிஷின் வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு மிஷின் கடந்த சில வாரங்களுக்கு முன் மாயமானது.
இதுகுறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாவட்ட மருத்துவ அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு கருவியை விரைவில் மீட்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் நேற்று காரைக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள பழைய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த லேப்ராஸ்கோப் கருவியை மருத்துவ அதிகாரிகள் மீட்டனர். எவ்வாறு கருவி மாயமானது.
எப்படி பழைய அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து மருத்துவ அதிகாரிகள்விசாரணை நடத்தி வருகின்றனர்.