/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி விழா தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ADDED : ஏப் 11, 2025 02:48 AM

சிவகங்கை,:சிவகங்கைமாவட்டம் காளையார்கோவில் அருகே உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி விழா தேரோட்டம் நேற்று காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஏப்., 2 இரவு 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. தினமும் இரவு 9:00 மணிக்கு அம்மன், சிம்மம் உட்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். 9 ம் நாளான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியநாயகி அம்மன் எழுந்தருளினார். அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. கிராம கமிட்டியினருக்கு ‛காளாஞ்சி' வழங்கி மரியாதை செய்தனர்.
தேரோட்டம் காலை 6:01 மணிக்கு ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து 6:45 மணிக்கு நிலையை அடைந்தது. கோயில் வளாகத்தில் பக்தர்கள் கரும்பு தொட்டில் கட்டியும், அக்னி சட்டி, காவடி எடுத்து நேர்த்தி செலுத்தினர். சிவகங்கை கூடுதல் எஸ்.பி., கலைக்கதிரவன், டி.எஸ்.பி., அமலஅட்வின், காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பத்தாம் நாளான இன்று இரவு 7:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா வருகிறார். அதனை தொடர்ந்து இரவு 10:00 மணிக்கு திருவிழா நிறைவு பெறும். தேவஸ்தான கண்காணிப்பாளர் பாலசரவணன், ஸ்தானிகர் ஐயப்பன் குருக்கள் மற்றும் கிராம கமிட்டியினர் விழா ஏற்பாட்டை செய்தனர்.