/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முதல்வர் மருந்தகம் விண்ணப்பிக்க நவ.30 கடைசி நாள் : இணை பதிவாளர் தகவல்

ADDED : நவ 25, 2024 06:10 AM
சிவகங்கை, : முதல்வர் மருந்தகத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நவ.,30 கடைசி நாளாகும் என கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகம் திறக்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இம்மருந்தகம் துவக்க பார்மசி படிப்பில் பட்டம், டிப்ளமோ முடித்தவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற முகவரிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கால அவகாசம் நவ., 11 என இருந்த நிலையில், பொதுமக்களின் நலன் கருதி ஆன்லைனில் விண்ணப்பிக்க காலஅவகாசம் நவ., 30 வரை வழங்கப்பட்டுள்ளது. மருந்தகம் திறக்க விரும்புவோர் விண்ணப்பித்து பயன்பெறலாம், என்றார்.