/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
லாடனேந்தல் கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அலட்சியம்: பொதுப்பணித்துறையினர் ஆண்டாக இழுத்தடிப்பு
/
லாடனேந்தல் கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அலட்சியம்: பொதுப்பணித்துறையினர் ஆண்டாக இழுத்தடிப்பு
லாடனேந்தல் கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அலட்சியம்: பொதுப்பணித்துறையினர் ஆண்டாக இழுத்தடிப்பு
லாடனேந்தல் கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அலட்சியம்: பொதுப்பணித்துறையினர் ஆண்டாக இழுத்தடிப்பு
ADDED : பிப் 10, 2025 04:41 AM
ஒரு ஆண்டாக நீடிக்கும் அகற்றும்பணி லாடனேந்தல் கண்மாய் 86 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்கண்மாய் நீரின் மூலம் ஆயிரம் ஏக்கரில் நெல் , வாழை, கரும்பு பயிரிட்டு வருகின்றனர். இக்கண்மாயின் உட்புறத்தில் சிலர் ஆக்கிரமித்து தென்னை, வாழை உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகின்றனர். இதை பொதுப்பணித்துறையினர் கண்டு கொள்ளாததால், ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கிவிட்டன. கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தடையின்றி கண்மாயில் நீரை தேக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் லாடனேந்தல் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிமன்ற உத்தரவுபடி 2024 மார்ச் 11ல் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் இயந்திரங்களுடன் சென்றனர். ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாக கூறவே அதிகாரிகள் திரும்பிவிட்டனர். மீண்டும் மார்ச் 15ம் தேதி மானாமதுரை டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்ற சென்றனர்.
ஆக்கிரமிப்பில் 6,348 மரங்கள்
கண்மாயின் உட்பகுதியில் செங்கல் சூளைகள், 6,348 தென்னை மரங்கள் ஆக்கிரமிப்பில் இருந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே தென்னை மரங்களை வெட்டி அகற்றுவதாக கூறிய உடன் அதிகாரிகள் திரும்பி விட்டனர். 3 மாதங்கள் கடந்த நிலையில் ஆயிரத்து 500 மரங்களை மட்டுமே வெட்டினர். ஜூலை 27ல் தாசில்தார் விஜயகுமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பூமிநாதன் உள்ளிட்டோர் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் மரங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டுவதாக கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அகற்றும் பணிக்கு தடை ஏற்பட்டது.
கண்மாய் மீட்பு அவசியம்
இக்கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி ஒரு ஆண்டாக நீடித்து வரும் நிலையில் இது வரை முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயை மீட்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அலட்சியம் காட்டுவதாக அக்கண்மாய் பாசன விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, லாடனேந்தல் கண்மாய் உட்பகுதி ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்ற வருவாய், போலீஸ், பொதுப்பணித்துறையினர் இணைந்து பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.