/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நீதிமன்றத்தை காரைக்குடிக்கு மாற்றுவதை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
/
நீதிமன்றத்தை காரைக்குடிக்கு மாற்றுவதை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
நீதிமன்றத்தை காரைக்குடிக்கு மாற்றுவதை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
நீதிமன்றத்தை காரைக்குடிக்கு மாற்றுவதை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
ADDED : அக் 09, 2025 09:35 PM
சிவகங்கை:சிவகங்கையில் இயங்கி வரும் இரு நீதிமன்றங்களை காரைக்குடிக்கு மாற்றுவதை கண்டித்து நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தின் கீழ் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான விசாரணை சிறப்பு நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம், விரைவு நீதிமன்றம், போக்சோ சிறப்பு நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் உள்ளிட்டவை இயங்குகின்றன. மாவட்ட கூடுதல் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான விசாரணை நீதிமன்றம் ஆகியவற்றை காரைக்குடிக்கு மாற்ற நீதித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இரு நீதிமன்றத்திற்கும் திருப்புத்துார், தேவகோட்டை, காரைக்குடி பகுதிகளில் இருந்தே அதிகளவில் வழக்குகள் வருவதாக கூறி இம்மாற்றம் செய்யப்படுகிறது.
நீதித்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று சிவகங்கையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் துவக்கினர். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சித்திரைச்சாமி தலைமையில் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலத்தில் ஈடுபட்டனர். பின் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சர்வ கட்சியினர், வர்த்தக சங்க நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
இன்று காலை 10:00 மணிக்கு சிவகங்கை அரண்மனை வாசலில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். தீர்வு காணாவிட்டால் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.