ADDED : நவ 13, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலைக்கிராமம், : சாலைக்கிராமம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சட்டப்பணிகள் தினம் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதி ஹரி ராமகிருஷ்ணன்,வெங்கடேஷ் பிரசாத் தலைமையில் நடந்தது.
தலைமை ஆசிரியர் கல்யாண சுந்தரம் வரவேற்றார். முகாமில் மாணவர்களுக்கு சட்டம் பற்றிய சந்தேகங்களுக்குரிய விளக்கங்களை அளித்தனர். வக்கீல்கள் சிவக்குமார், சேவியர் டி பிரிட்டோ, வேல்முருகன், சுகன்யா, அமர்நாத், கஜேந்திரன், எஸ்.ஐ., அழகர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஜெயசீலன் நன்றி கூறினார். சட்டப்பணிகள் குழு இளவரசன் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

