ADDED : ஜன 30, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: சிவகங்கை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு மற்றும் காரைக்குடி அரசு சட்டக் கல்லுாரி சார்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முதன்மை மாவட்ட நீதிபதி கே.அறிவொளி பேசினார். அதில் மூன்றாம் பாலினத்தவருக்கு பொருளுதவி செய்வதை விட மனதளவில் அவர்களை மனிதர்களாக மதிப்பது தான் சிறந்த பண்பாகும். மூன்றாம் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு, அதற்கான சட்டம் இயற்றப்பட்டு அவர்களுக்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. என்றார்.
முகாமில் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி பசும்பொன் சண்முகையா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் சுப்பையா, காரைக்குடி விரைவு நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா, சட்டக் கல்லுாரி முதல்வர் முருகேசன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.