/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழைக்கு ஒழுகும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மரத்தடியில் பாடம்
/
மழைக்கு ஒழுகும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மரத்தடியில் பாடம்
மழைக்கு ஒழுகும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மரத்தடியில் பாடம்
மழைக்கு ஒழுகும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மரத்தடியில் பாடம்
ADDED : செப் 09, 2025 04:03 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அரசுப் பள்ளி கட்டடம் மழைக்கு ஒழுகுவதால் அச்சத்தில் மாணவர் களுக்கு மரத்தடியில் பாடம் நடத்தப்படுகிறது.
இவ்வொன்றியத்தில் கோழிக் குடிபட்டி ஊராட்சி எம்.வையா புரிபட்டி அரசு துவக்கப் பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
1986ல் கட்டப்பட்ட இரு வகுப்பறை கொண்ட கட்டடம் பழுதடைந்து மழை தண்ணீர் ஒழுகியது. 2021ல் மேற்கூரை பழுதுபார்க்கப்பட்டும் பயன்இல்லை.
மழைக்காலங்களில் மீண்டும் கூரை ஒழுகி வகுப்பறை முழுவதும் தண்ணீர் தேங்கி விடுகிறது. கட்டடம் இடிந்து விழுமோ என்ற அச்சம் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.
ஆசிரியர்கள் கட்டடத்திற்குள் வகுப்புகளை நடத்தாமல் வெளியே மரத்தடியில் மாணவர்களை அமரவைத்து பாடம் நடத்துகின்றனர். மழை, வெயில் காலங்களில் மாணவர்களும் ஆசிரியர்களும் அவதிப் படுகின்றனர்.
பொன்.சண்முகராஜா, முன்னாள் ஊராட்சிதலைவர், மு.சூரக்குடி: பழுதான கட்டட மேற்கூரையில் தட்டு ஓடுகள் பதித்து பழுது பார்த்தும், தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். பள்ளிக்கு தரமான கட் டடம் இல்லாததால் சிலர் தங்களது பிள்ளைகளை மதுரை மாவட்ட பகுதி யில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு பள்ளியில் மாணவர் சேர்க்கையும் குறையக்கூடும். எனவே இப்பள்ளிக்கு உடனடியாக புதிய வகுப்பறை கட்டடம் கட்டித்தர வேண்டும்.