sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இயற்கை தந்த கொடையான மரங்களை பாதுகாப்போம்! திருப்புவனத்தில் கட்டடத்திற்காக அகற்றம்

/

இயற்கை தந்த கொடையான மரங்களை பாதுகாப்போம்! திருப்புவனத்தில் கட்டடத்திற்காக அகற்றம்

இயற்கை தந்த கொடையான மரங்களை பாதுகாப்போம்! திருப்புவனத்தில் கட்டடத்திற்காக அகற்றம்

இயற்கை தந்த கொடையான மரங்களை பாதுகாப்போம்! திருப்புவனத்தில் கட்டடத்திற்காக அகற்றம்


ADDED : ஜூன் 24, 2024 01:46 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம் : இயற்கை தந்த கொடையான மரங்களை பாதுகாக்கும் நோக்கில், திருப்புவனம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம் கட்டும் இடத்தில் இருந்த மரங்களை வெட்டி சாய்க்காமல், அப்படியே எடுத்துவேறு இடத்தில் நடவு செய்து பாதுகாத்தனர்.

திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு தினமும் 700 வெளி, 75 உள் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு பிரசவம் அதிகளவில் நடக்கிறது. இதனால், அவசர கால மகப்பேறு, குழந்தை பராமரிப்பு பணிகளை இங்கு மேற்கொள்ள கூடுதல் கட்டடங்கள் கட்ட மார்ச் 16 ல் அடிக்கல் நாட்டினர். அதே நேரம் மருத்துவமனை வளாகத்தில் பழமையான வேப்ப மரங்கள் வளர்ந்துள்ளன. இங்குள்ள 10 க்கும் மேற்பட்ட மரங்களை அகற்றினால் தான், கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், மரங்களை அப்படியே அகற்றி வேறு இடத்தில் நட்டு வைத்து வளர்க்க முடிவு செய்தனர். இதற்காக மரங்களை சுற்றி 5 அடி அகல குழி வெட்டி மரங்களை அப்படியே ராட்சச இயந்திரங்கள் மூலம் பெயர்த்து எடுத்து, மருத்துவமனை வளாகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நட்டு வைத்தனர். இந்த மரங்கள் தொடர்ந்து பராமரித்த வளர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வளர்ந்து வரும் நகரமாக இருப்பதால், பல இடங்களில் மரங்கள் அகற்றப்பட்டு கட்டடங்கள் புற்றீசல் போல் உருவாகி வரும் நிலையில் பழமை வாய்ந்த மரங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்று ஒவ்வொரு கட்டுமான பணிக்கு முன் அங்குள்ள மரங்களை வெட்டாமல், அப்படியே அகற்றி மாற்று இடத்தில் நட்டு வைத்து வளர்ப்பதின் மூலம் இயற்கை வழங்கிய கொடையான மரங்களை பாதுகாப்போம்.






      Dinamalar
      Follow us