/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி
/
அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி
ADDED : அக் 01, 2024 04:54 AM
காரைக்குடி: இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது.
காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் பாண்டியன் கூறுகையில்:
கடிதம் எழுதுவதன் முக்கியத்துவத்துவத்தை அறிந்து கொள்ளும் வகையில் இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது. டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில், தமிழ் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய ஏதாவது ஒரு மொழியில் கடிதத்தை எழுதலாம்.
18 வயதுக்கு உட்பட்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். ஆயிரம் வார்த்தைக்கு மிகாமல் ரூ.5 மதிப்பிட்ட அஞ்சல் உறையிலும், அல்லது 500 வார்த்தைகளுக்கு மிகாமல் இன்லேண்ட் லெட்டர் கவரிலும் எழுதி தி சீப் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், தமிழ்நாடு, சென்னை 02 என்ற முகவரிக்கு வரும் டிச.14 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கடிதங்கள் கைப்பட எழுதியவையாக இருக்க வேண்டும். மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரமும் மூன்றாம் பரிசு 5 ஆயிரம் வழங்கப்படும். தேசிய அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரமும், 3 ஆம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.