/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சருகணியில் லெவே அடிகள் விண்ணக பிறப்பு விழா
/
சருகணியில் லெவே அடிகள் விண்ணக பிறப்பு விழா
ADDED : மார் 23, 2025 07:37 AM

தேவகோட்டை : சருகணியில் பாதிரியாராக பணியாற்றிவர் லெவே அடிகள். இவர் புனிதர் பட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இவரது நினைவு நாள் விண்ணக பிறப்பு விழாவாக சருகணி சர்ச்சில் நடைபெற்றது.
நினைவு மண்டபத்தில் சிறப்பு திருப்பலியும் மாலை சிலுவைபாதை வழிபாடும் நடந்தது. இதனைத் தொடர்ந்து மாலை திரு இருதயங்கள் சர்ச் வளாகத்தில் சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு திருப்பலி நடந்தன.
லெவே அடிகள் திரு உருவ பட ஊர்வலம் நடைபெற்றது.
ஏற்பாடுகளை சருகணி பங்கு பாதிரியார் லூர்துராஜ், உதவி பங்கு பாதிரியார் நிக்கோலாஸ் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.