/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போலி விதைகளை விற்றால் லைசென்ஸ் ரத்து விதை ஆய்வு துணை இயக்குனர் தகவல்
/
போலி விதைகளை விற்றால் லைசென்ஸ் ரத்து விதை ஆய்வு துணை இயக்குனர் தகவல்
போலி விதைகளை விற்றால் லைசென்ஸ் ரத்து விதை ஆய்வு துணை இயக்குனர் தகவல்
போலி விதைகளை விற்றால் லைசென்ஸ் ரத்து விதை ஆய்வு துணை இயக்குனர் தகவல்
ADDED : ஆக 20, 2025 11:30 PM
சிவகங்கை : மாவட்ட அளவில் விதை விற்பனையாளர்கள் போலி விதைகளை விற்பனை செய்தால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என சிவகங்கை விதை ஆய்வு துணை இயக்குனர் இப்ராம்சா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: விதை சட்ட விதிகளை அனைத்து விற்பனையாளர்களும் கடைபிடிக்க வேண்டும். விதிகளை மீறினால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். தனியார் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் உண்மை நிலை விதைகள் அனைத்தும் விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம்.
எனவே விவசாயிகள் அரசு அங்கீகாரம் பெறாத மற்றும் பதிவு சான்று இல்லாத விதைகளை வாங்கி ஏமாற்றம் அடைய வேண்டாம்.
போலி விதைகளை கண்டறிய வேண்டும். இவை பெரும்பாலும் உண்மையான விதை போன்று தோற்றம் அளிக்கும். ஆனால் அவை முளைப்பதில்லை அல்லது பயிர்கள் சரியாக வளராமல் போகும்.
இது போன்ற விதைகள் விவசாயிகளுக்கு பொருளாதார, உற்பத்தி ரீதியாக இழப்பை ஏற்படுத்தும். விதை விற்பனையாளர்கள் அனைவரும் உற்பத்தியாளர்களிடம் இருந்து விதைகளை பெற்றவுடன் விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனைக்கு அனுப்பி அதிகபட்ச முளைப்புத்திறன் கொண்ட விதைகளை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
விதைகளின் இருப்பு மற்றும் ரகங்களின் விபரங்களை விலைப்பட்டியலுடன் தகவல் பலகையில் குறிப்பிடவேண்டும். விதை கொள்முதல் செய்வதற்கான பட்டியல், பதிவு சான்று, விதைக்கான பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல், இருப்பு பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும்.
விற்பனை செய்த விதைகளுக்கு ரசீது கட்டாயம் வழங்க வேண்டும். அதில் விதை சட்டத்தை கடைபிடிக்காத விதை விற்பனை நிலையங்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.