ADDED : மார் 27, 2025 06:59 AM

சிவகங்கை: சிவகங்கையில் சுற்றுச்சுழல், வனம், காலநிலை மாற்றுத்துறையின் சார்பில் 'நீடித்த நிலையான வாழ்வியல் முறை' குறித்த கண்காட்சி நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார். சி.இ.ஓ., பி.ஏ., சம்பத்குமார் துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் வரவேற்றார். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பிரிட்டோ, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ், தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன், பசுமை புத்தாக்க உறுப்பினர் மித்ரா, புனித ஜஸ்டின் மகளிர் கல்லுாரி முதல்வர் பிருந்தா, பேராசிரியர் பெர்லின் சுனிதா எஸ்தர் பங்கேற்றனர்.
கண்காட்சியில் பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருள் பயன்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, நீடித்த நிலையான வாழ்வியல் முறை கடைபிடித்தல், காற்று மாசு தவிர்த்தல் போன்ற படைப்பு இடம் பெற்றிருந்தன. முதல் பரிசு ரூ.10 ஆயிரத்தை பழையனுார் அரசு மேல்நிலை பள்ளி, இரண்டாம் பரிசு ரூ.8000 யை கண்ணங்குடி அரசு மேல்நிலை பள்ளி, மூன்றாம் பரிச ரூ.7000 யை வேட்டையன்பட்டி அரசு நடுநிலை பள்ளி பெற்றன.