/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நான்கு வழிச்சாலையில் எரியாத விளக்குகள்
/
நான்கு வழிச்சாலையில் எரியாத விளக்குகள்
ADDED : ஆக 22, 2025 02:53 AM

திருப்புவனம்: மதுரை -- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உயர் மின்கோபுர விளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது.
நான்கு வழிச்சாலையில் கீழடி, மணலுார், சக்குடி விலக்கு, திருப்புவனம் பைபாஸ், பிரமனுார் விலக்கு உள்ளிட்ட இடங்களில் உயர் மின்கோபுர விளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்து நேரிட்டது.
சக்குடி விலக்கில் இரவு நேரத்தில் அதிகளவில் விபத்து நடந்தது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்திகள் வெளியானதை அடுத்து உயர் மின்கோபுர விளக்குகள் பொருத்தப்பட்டன. பொருத்தப்பட்ட மின்விளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரியாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.