/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நான்கு வழிச்சாலையில்விபத்தை தவிர்க்க கோடுகள்
/
நான்கு வழிச்சாலையில்விபத்தை தவிர்க்க கோடுகள்
ADDED : ஜன 09, 2024 12:15 AM

திருப்புவனம், : மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலையில் விபத்துக்களை தவிர்க்க மஞ்சள் நிற கோடு வரையும் பணி தொடங்கியுள்ளது.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும் அதன்பின் ராமநாதபுரம் வரை தலா பத்து மீட்டர் அகலம்கொண்ட இருவழிச்சாலையும் அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது. நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் விபத்துகள் நேரிட்டு உயிழப்பு ஏற்பட்டு வருகின்றன.
விபத்துகள் அதிகளவில் நடைபெறும் இடங்களான கீழடி விலக்கு, மணலுார், சக்குடி விலக்கு, திருப்புவனம் பைபாஸ், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களின் வேகத்தை குறைக்க பேரி கார்டு அமைக்கப்பட்டுள்ளன. பேரி கார்டுகள் இருப்பது தெரியாமலும் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதால் பேரி கார்டுகளுக்கு சற்று முன்னதாக மஞ்சள் நிற கோடுகள் வரையும் பணி தொடங்கியுள்ளது.
மஞ்சள் நிற கோடு இரவு நேரத்தில் வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு தெரியும் என்பதால்மஞ்சள் நிற கோடுகள் வரையப்பட்டுள்ளதாகவும்மதுரையில் இருந்து ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை இந்த மஞ்சள்நிற கோடு வரையப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.