நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் கிளை நுாலகத்தில் பொது நுாலகத்துறை,ஆ.பி.சீ.அ.கல்லூரி மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து இளைஞர் இலக்கியத் திருவிழா நடத்தினர்.
10 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சான்றிதழ்களை செயலர் நா.ஆறுமுகராஜன் வழங்கினார்.
தமிழ்த்துறை தலைவர் அமல்ராஜன், மாவட்ட நுாலக அலுவலர் தர்மர், முதல்வர் ஜெயக்குமார், துணை முதல்வர் அழகப்பன், நுாலகர் மகாலிங்க ஜெயகாந்தன், வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் பங்கேற்றனர். கிளை நுாலகர் ஜேசுராஜா நன்றி கூறினார்.

