/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இலவச ஆம்புலன்ஸ் இல்லாமல் இறக்கும் கால்நடைகள்
/
இலவச ஆம்புலன்ஸ் இல்லாமல் இறக்கும் கால்நடைகள்
ADDED : மே 01, 2025 06:22 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி தாலுகாவில் அரசின் கால்நடைத் துறை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் பாதிப்பு தொடர்கிறது.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி சுற்று வட்டாரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் திரிகின்றன. ஏரியூர், மாம்பட்டி பகுதியில் ஏராளமான வீட்டு மாடுகளும் கட்டாமல் அவிழ்த்து விடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. எஸ்.புதுார் ஒன்றியத்தில் விவசாயிகள் பலர் விவசாயத்திற்காக ஏராளமான கால்நடைகளை வளர்க்கின்றனர். தட்பவெப்ப நிலை மாறும் போது இப்பகுதியில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு நோய் தொற்று ஏற்பட்டு இறக்கின்றன.
ரோட்டில் திரியும் கோயில் மாடுகள் வாகனங்களில் அடிபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் இறப்பது தொடர்கிறது. தமிழகத்தில் 2019ல் கால்நடை ஆம்புலன்ஸ் திட்டம் துவக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 6 இடங்களில் இந்த ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது. மாடுகள் அதிகம் உள்ள சிங்கம்புணரிக்கு விரைவில் ஆம்புலன்ஸ் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் இதுவரை வரவில்லை.
நோய் தாக்கிய, காயமடைந்த மாடு களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் பல கால்நடைகள் இறக்கின்றன. சிங்கம்புணரியை மையமாகக் கொண்டு கால்நடை ஆம்புலன்ஸ் இயக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினேஷ் பொன்னையா, சமூக ஆர்வலர் சிங்கம்புணரி; இப்பகுதியில் ஏராளமான கோயில் மாடுகளும் தனியார் மாடுகளும் உள்ளன. அவசர காலங்களில் சிகிச்சைக்கு கொண்டு செல்ல வாகனங்களில் கூடுதல் கட்டணம் கேட்பதால் தாமதம் ஏற்பட்டு மாடுகள் இறப்பது தொடர்கிறது. முடித்தவரை காயம் பட்ட மாடுகளை கோசாலைக்கு கொண்டு வந்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கிறோம். ஆனால் பெரும்பாலான மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியவில்லை. எனவே இப்பகுதிக்கு தனியாக கால்நடை ஆம்புலன்ஸ் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.