/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தனியார் வங்கியில் கடன்; ரூ.1.93 லட்சம் மோசடி
/
தனியார் வங்கியில் கடன்; ரூ.1.93 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 30, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மேலவேலுார் கிராமத்தை சேர்ந்த இளைஞர் அலைபேசிக்கு கடந்த மாதம் கடன் தொடர்பான குறுஞ்செய்தி வந்துள்ளது.
பின்னர் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு தனியார் வங்கியின் பெயரை கூறி பேசியுள்ளார். இளைஞருக்கு லோன் தருவதாக ஆசைவார்த்தை கூறினார். அவர் கூறியதை நம்பிய அந்த இளைஞர் அவர் கூறி வங்கி கணக்கிற்கு ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 583 ரூபாயை பல தவணைகளில் அனுப்பியுள்ளார்.
பணத்தை பெற்ற அந்த நபர் லோன் தராமல் ஏமாற்றியுள்ளார். இழந்த பணத்தை மீட்டு தருமாறு அந்த இளைஞர் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.