/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.35 லட்சத்தில் சிவகங்கையில் கட்டப்பட்ட கழிப்பறைக்கு 'பூட்டு'
/
ரூ.35 லட்சத்தில் சிவகங்கையில் கட்டப்பட்ட கழிப்பறைக்கு 'பூட்டு'
ரூ.35 லட்சத்தில் சிவகங்கையில் கட்டப்பட்ட கழிப்பறைக்கு 'பூட்டு'
ரூ.35 லட்சத்தில் சிவகங்கையில் கட்டப்பட்ட கழிப்பறைக்கு 'பூட்டு'
ADDED : ஜூலை 01, 2025 02:46 AM

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே துாய்மை பாரத இயக்க 2.0 திட்டத்தில் கட்டப்பட்ட கழிப்பறை மின் இணைப்பு, தண்ணீர் இல்லாததால் பூட்டப்பட்டுள்ளது.
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே பயணிகள், வாடகை வாகன ஓட்டுநர்கள் பயன்பெறும் வகையில் ரூ.34.28 லட்சம் செலவில் பொதுக்கழிப்பறை 2021--22ம் நிதியாண்டில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
மின்வாரியத்தில் முறையான மின் இணைப்பு பெறாமல் திறக்கப்பட்டு சில தினங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளது. மின் இணைப்பு இல்லாததால் போர்வெல் வசதி இருந்தும் மோட்டாரை இயக்க மின்சாரம்இல்லாததால் கழிப்பறைக்கான தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடியவில்லை. தண்ணீர் வசதி இல்லாததால் இந்த கழிப்பறையை அவசரத்திற்கு கூட யாரும் பயன்படுத்த முடியாத நிலை தற்போது நிலவுகிறது.
கடந்த ஆட்சியில் இதே பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்த 'நம்ம டாய்லெட்' அவசரம் அவசரமாக அகற்றப்பட்டு அதே இடத்தில் துாய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தில் ரூ.34.38 லட்சம் செலவில் கட்டப்பட்ட கழிப்பறையும் தற்போது காட்சிப்பொருளாகத்தான் உள்ளது.
நகராட்சி நிர்வாகம் பொதுக்கழிப்பறைக்கு நிரந்தர மின் இணைப்பு பெறாமல் ஏன் திறந்தனர் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இரண்டரை ஆண்டு காலம் முறையாக மின் இணைப்பு பெறாமல் இந்த கழிப்பறை முழுமையாக இயங்காமல் கிடக்கிறது. நகராட்சியில் பல இடங்களில் கட்டப்பட்ட கழிப்பறை அனைத்தும் தண்ணீரின்றி பயன்படாமல் தான் இருக்கிறது.
சிவகங்கை நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் கூறுகையில், பொதுக்கழிப்பறை கட்டடத்திற்கு மின் இணைப்பு பெறாமல் இருந்தது. கடந்த மாதம் தான் மின் இணைப்பு பெறப்பட்டது. நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்ததால் துாய்மை பணியை மேற்கொண்டு இரண்டு நாட்களில் மக்கள்பயன்பாட்டிற்கு வந்து விடும் என்றார்.