/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவக் கல்லுாரியில் கழிப்பறைக்கு பூட்டு
/
மருத்துவக் கல்லுாரியில் கழிப்பறைக்கு பூட்டு
ADDED : செப் 02, 2025 05:27 AM

சிவகங்கை : சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவிற்கு அருகில் உள்ள பொது கழிப்பறைக்கு பூட்டு போடப்பட்டுள்ளதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவிற்கு தினசரி 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 800 பேர் உள்ளனர். அவசரகால தீவிர சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் செல்படுகிறது.
மாவட்டத்தின் பிற பகுதியில் இருந்தும் அருகில் உள்ள ராமாநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாடானை, பார்த்திபனுார் உள்ளிட்ட பகுதியில் இருந்தும் மக்கள் சிவகங்கை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.
இந்த மருத்துவமனை வளாகத்தில் புற நோயாளிகள் பிரிவிற்கு வருவோர் பயன்படுத்துவதற்கு அம்மா உணவகம் அருகே பொது கழிப்பறை உள்ளது.
இந்த கழிப்பறை கடந்த சில தினங்களாக பூட்டப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு வரும் பெண்கள் முதியவர்கள் சிரமப்படுகின்றனர்.
மருத்துவமனை நிர்வாகம் பூட்டி கிடக்கும் கழிப்பறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.