/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொட்டிக்கு பூட்டுகுடிநீருக்கு சிக்கல்
/
தொட்டிக்கு பூட்டுகுடிநீருக்கு சிக்கல்
ADDED : பிப் 21, 2024 11:54 PM
காரைக்குடி, - குன்றக்குடி ஊராட்சிக்குட்பட்ட சண்முகநாதபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ள இடத்திற்கு வேலி அமைத்து பூட்டு போட்டதால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
சண்முகநாதபுரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த 2014 -- 15ம் ஆண்டு பத்தாயிரம்லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நீர்த்தேக்க தொட்டி உள்ள இடம் தனக்கு சொந்தமானது எனக் கூறி ஒருவர் முள்வேலி அமைத்து பூட்டு போட்டுள்ளார். இதனால், நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இது குறித்து கிராம மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தாசில்தார் மாணிக்கவாசகம் கூறுகையில், நீர்த்தேக்க தொட்டி உள்ள இடத்தை பார்வையிட்டோம். நத்தம் புறம்போக்கு இடத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
பட்டா அவர்களது பெயரில் உள்ளது. நீர்த்தேக்க தொட்டி உள்ளதால் சம்பந்தப்பட்டவர்களிடம் வேலியை அகற்றுவதற்கு காலஅவகாசம் வழங்கி உள்ளோம், என்றார்.