sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரையில் பூட்டப்பட்ட கழிப்பறை

/

மானாமதுரையில் பூட்டப்பட்ட கழிப்பறை

மானாமதுரையில் பூட்டப்பட்ட கழிப்பறை

மானாமதுரையில் பூட்டப்பட்ட கழிப்பறை


ADDED : அக் 01, 2024 05:05 AM

Google News

ADDED : அக் 01, 2024 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மதுரை -ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரையில் உள்ள கழிப்பறை பூட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும்,வெளி மாநில பக்தர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மதுரை-=ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் மானாமதுரை அமைந்துள்ளது. நான்கு வழிச்சாலை ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.இந்த சாலை வழியாக தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

மானாமதுரையில் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள கழிப்பறைகள் சில மாதங்களாக பூட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வாகன ஓட்டிகள் கூறியதாவது: கழிப்பறைகள் இருக்கும் பகுதியில் மின்விளக்கு எரியாமல் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் பூட்டப்பட்டு கிடக்கும் கழிப்பறைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:கழிப்பறைகளை தனியார் ஒப்பந்ததாரர்கள் பராமரித்து வருகின்றனர். மதுரை- ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் பூட்டப்பட்டு கிடக்கும் கழிப்பறைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.






      Dinamalar
      Follow us