ADDED : மார் 28, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் ஏப்.,16ல் காளையார்கோவில் தாலுகாவில் நடக்கிறது.
இதற்காக ஏப்., 1 முதல் 14ம் தேதி வரை காளையார்கோவில் தாலுகாவில் உள்ள பேரூராட்சி, வி.ஏ.ஓ., ஊராட்சி அலுவலகங்களில் கோரிக்கை மனுக்களை வழங்கலாம். ஏப்.,16 அன்று நடக்கும்முகாமில் மாவட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். அன்றைய தினம் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.