/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோட்டையூரில் விடுதிகளாக செயல்படும் வீடுகளால் இழப்பு
/
கோட்டையூரில் விடுதிகளாக செயல்படும் வீடுகளால் இழப்பு
கோட்டையூரில் விடுதிகளாக செயல்படும் வீடுகளால் இழப்பு
கோட்டையூரில் விடுதிகளாக செயல்படும் வீடுகளால் இழப்பு
ADDED : மார் 10, 2024 06:29 AM
காரைக்குடி, : ரைக்குடி அருகே கோட்டையூர் பேரூராட்சி பகுதியில் வாடகை வீடுகளை விடுதிகளாக வாடகைக்கு விட்டுள்ளதால், பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இப்பேரூராட்சியில் கோட்டையூர், பாரி நகர், ஸ்ரீராம் நகர் பகுதியில் அதிகளவில் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் கல்லுாரி, பல்கலையில் படிக்கும் வெளிமாநில மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.
இது தவிர போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அதிகளவில் செயல்படுவதால், அதற்காகவும் பல மாநிலங்களில் இருந்து பட்டதாரிகள் வருகின்றனர். இவர்கள் கூடுதல் வாடகை செலுத்தி தனியார் லாட்ஜ்களில் தங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதற்காக வீடுகளை வாடகைக்கு விடுவோர், மாணவர்கள் விடுதி போல் ஒட்டு மொத்தமாக விடுகின்றனர்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி புரோக்கர்கள் சிலர் வீடுகளை வாடகைக்கு எடுத்து, மாணவர்களுக்காக விடுதி போல் செயல்படுத்துகின்றனர். இதற்காக ஒரு மாணவரிடம் மாதத்திற்கு ரூ.5 முதல் 8 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். ஒரே வீட்டில் 30 முதல் 50 பேர் வரை தங்குகின்றனர். இதனால், பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து பேரூராட்சி தலைவர் கார்த்திக் சோலை கூறியதாவது:
புகார்கள் வந்ததை அடுத்து விடுதிகளாக செயல்படும் வீடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியதில், 65 வீடுகளை விடுதிகளாக செயல்படுத்துகின்றனர். முறையாக பதிவு பெற்று விடுதிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

