ADDED : ஜூலை 31, 2025 10:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி; பள்ளத்துாரில் வைக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகைகள், மரங்கள் வளர்ந்து மறைந்து காணப்படுகிறது.
முக்கிய சுற்றுலாத்தலமான காரைக்குடிக்கு தினமும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கானாடுகாத்தான் ஆத்தங்குடி பள்ளத்துார் கண்டனுார் உட்பட பல பகுதிகளிலும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் ஊர் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதில், ஊர் பெயருடன், துாரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், பள்ளத்துாரில் இருந்து கொத்தமங்கலம் அறந்தாங்கி செல்லும் சாலையில், ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இப்பலகையானது வளர்ந்துள்ள மரங்களால் மறைக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் வழி தெரியாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.