/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் லாட்டரி புழக்கம் தாராளம்
/
இளையான்குடியில் லாட்டரி புழக்கம் தாராளம்
ADDED : ஆக 22, 2025 10:18 PM
இளையான்குடி : இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி,குட்கா பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழக அரசு புகையிலை,பான்மசாலா,குட்கா போன்ற போதைப் பொருட்களுக்கு தடை விதித்துள்ள நிலையில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளுக்கும் தடை விதித்துள்ளது. இளையான்குடியில் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தாலும் வியாபாரிகள் மாற்று வழியில் புதுப்புது வழிகளை கையாண்டு விற்பனை செய்து வருகின்றனர்.
இதேபோன்று தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்பவர்கள் அன்றாடம் கூலி தொழிலாளர்களை குறி வைத்து அவர்களிடம் லாட்டரி சீட்டு எண் எழுதப்பட்ட துண்டு சீட்டுகளை கொடுத்து தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றனர்.
மதுக்கடைகள் இல்லாத கிராம பகுதிகளில் உள்ள சில கடைகளில் சர்வ சாதாரணமாக மது பாட்டில் கிடைப்பதால் அதிகாலையிலேயே ஏராளமானோர் குடித்து விட்டு வேலைகளுக்கு செல்லாமல் சச்சரவுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இளையான்குடி போலீசார் அவ்வப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் புகையிலை பொருட்கள், மது பாட்டில் விற்பனை செய்பவர்களை கைது செய்தாலும் மீண்டும்,மீண்டும் ஒரு சில நாட்களிலேயே விற்பனையில் ஈடுபட்டு வருவதால் மாணவர்கள்,கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.