/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரம் நகை திருட்டு வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ.,யிடம் ஒப்படைப்பு
/
மடப்புரம் நகை திருட்டு வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ.,யிடம் ஒப்படைப்பு
மடப்புரம் நகை திருட்டு வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ.,யிடம் ஒப்படைப்பு
மடப்புரம் நகை திருட்டு வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ.,யிடம் ஒப்படைப்பு
ADDED : ஆக 22, 2025 12:56 AM
திருப்புவனம்:பேராசிரியை நிகிதாவின் நகை திருட்டு சம்பந்தமான வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ.,அதிகாரிகளிடம் முறைப்படி திருப்புவனம் போலீசார் ஒப்படைத்தனர்.
ஜூன் 27ல் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த திருமங்கலம் பேராசிரியை நிகிதாவின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் திருடு போனது.
இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். இரவு 9:30 மணிக்கு புகார் ரசீது வழங்கப்பட்டது. ஜூன் 28 காலை 10:00 மணிக்கு எஸ்.ஐ.,சிவப்பிரகாஷ் நகை திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரணையில் கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் உயிரிழந்தார். சி.பி.ஐ., அதிகாரிகள் ஜூலை 12 முதல் விசாரித்து ஆக. 20ல் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து போலீசாருடன் ஆறாவதாக போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரனையும் இணைத்தனர்.
வழக்கில் டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், தனிப்படை போலீசார் உள்ளிட்டவர்களின் அலைபேசி ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவிற்கு பின் மேலும் சிலர் வழக்கில் சேர்க்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் நகை திருட்டு தொடர்பாகவும் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்தும் சி.பி.ஐ., அதிகாரிகள் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை பெற்றுச் சென்றனர். நிகிதா நகை திருடு போன சம்பவம் தொடர்பாக ஜூன் 27 முதல் நடந்த விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.