/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மதுரை -- ராமநாதபுரம் 4 வழிச்சாலையில் குப்பைகளில் தீ மூட்டுவதால் பாதிப்பு

ADDED : நவ 05, 2024 05:16 AM

மானாமதுரை: மதுரை - ராமநாதபுரம் 4 வழிச்சாலையில், மானாமதுரை பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டி, தீ வைப்பதால், புகை மூட்டம் மூலம் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
மதுரை - ராமநாதபுரம் 4 வழிச்சாலையில் தினமும் ராமேஸ்வரம் புண்ணிய தீர்த்தத்தில் நீராட வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இதனால் இந்த ரோடு எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக உள்ளன.
இந்நிலையில் மானாமதுரை அருகே ராஜகம்பீரம், முத்தனேந்தல், திருப்பாச்சேத்தி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை நான்கு வழிச்சாலை ஒட்டியுள்ள பகுதியில் கொட்டிவிடுகின்றனர்.
இந்த குப்பைகளையும் சுத்திகரிப்பு செய்யாமல், தீ வைத்து எரிக்கின்றனர். இங்கிருந்து எழும் கரும்புகையால், ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் புகையால் வாகனங்களில் செல்லும் பயணிகளுக்கு மூச்சு திணறலும் ஏற்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், நான்குவழிச்சாலை ரோட்டோரம் குப்பைகள் கொட்ட தடை விதிக்க வேண்டும்.