/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தெற்கு ரயில்வே வருவாயில் சென்னை சென்ட்ரல் முதலிடம் 7வது இடத்தில் மதுரை
/
தெற்கு ரயில்வே வருவாயில் சென்னை சென்ட்ரல் முதலிடம் 7வது இடத்தில் மதுரை
தெற்கு ரயில்வே வருவாயில் சென்னை சென்ட்ரல் முதலிடம் 7வது இடத்தில் மதுரை
தெற்கு ரயில்வே வருவாயில் சென்னை சென்ட்ரல் முதலிடம் 7வது இடத்தில் மதுரை
ADDED : செப் 27, 2024 02:57 AM
சிவகங்கை:தெற்கு ரயில்வே கட்டண வசூலில் கடந்த ஆண்டில் ரூ.1215 கோடி வருவாய் ஈட்டி சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் முதலிடம் பெற்றுள்ளது. ரூ.208.74 கோடி வருவாயுடன் மதுரை ஏழாவது இடத்தில் உள்ளது.
தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் தமிழகம்,கேரளா, ஆந்திராவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், திருப்பதி, சென்னை, மங்களூரூ, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அதிகளவில் ரயிலில் பயணிக்கின்றனர்.
2023--24 ஆண்டில் ரூ.1215.79 கோடி வருவாய் ஈட்டி சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முதலிடத்தை பிடித்துள்ளது. ரூ.564.17 கோடியுடன் சென்னை எழும்பூர் இரண்டாம் இடமும், ரூ.324.99 கோடி வருவாயுடன் கோவை மூன்றாம் இடம், ரூ.262.66 கோடி வருவாயுடன் திருவனந்தபுரம் நான்காம் இடம், ரூ.233.66 கோடி வருவாயுடன் தாம்பரம் 5ம் இடம், ரூ.227.59 கோடி வருவாயுடன் எர்ணாகுளம் 6வது இடம், ரூ.208.74 கோடி வருவாய் ஈட்டி மதுரை ஏழாவது இடத்தை பிடித்துள்ளன.
ரூ.47.25 கோடி வருவாய் ஈட்டி திண்டுக்கல் 32 வது இடம், ரூ.33.07 கோடி வருவாய் பெற்று துாத்துக்குடி 38 வது இடம், ரூ.29.61 கோடி வருவாய் ஈட்டி விருதுநகர் 45 வது இடம், ராமநாதபுரம் ரூ.27.75 கோடி வருவாயுடன் 46 வது இடத்தை பெற்றுள்ளன. ரூ.7.71 கோடி வருவாயுடன் சிவகாசி 100 வது இடத்தில் உள்ளது.

