sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நவ. 3ல் மகா கும்பாபிேஷகம்  

/

ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நவ. 3ல் மகா கும்பாபிேஷகம்  

ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நவ. 3ல் மகா கும்பாபிேஷகம்  

ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நவ. 3ல் மகா கும்பாபிேஷகம்  


ADDED : அக் 19, 2025 09:16 PM

Google News

ADDED : அக் 19, 2025 09:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: இளையான்குடி ஞானாம்பிகை சமேத ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நவ.,3 ல் கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் அக்.,31 அன்று காலை 8:00 முதல் 10:30 மணிக்குள் அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் கும்பாபிேஷக பூஜைகள் துவங்குகின்றன. அன்று மாலை 5:00 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜையும், நவ., 1 அன்று காலை 8:00 முதல் 11:30 மணிக்குள் 2 ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, அன்று மாலை 5:30 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை, நவ., 2 ம் தேதி காலை 8:00 மணிக்கு 4 ம் கால யாகசாலை பூஜை, மருந்து சாத்துதல், மாலை 6:05 மணிக்கு 5 ம் கால யாகசாலை பூஜையும், சுவாமி அம்பாளுக்கு எந்திர ஸ்தாபனம் செய்யப்படும்.

நவ., 3 அன்று காலை 5:30 மணிக்கு 6 ம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிேஷகம் துவங்குகிறது. அன்று காலை 6:30 மணிக்கு நாடி சந்தனம், மகாபூர்ணாகுதி, தீபாராதனை, காலை 9:00 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடும், காலை 9:30 முதல் 10:25 மணிக்குள் மூலஸ்தானம், ராஜ கோபுரம், பரிவார தெய்வ கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர்.

அன்று மதியம் 12:05 முதல் 1:30 மணி வரை மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படும். அன்று மாலை 5:00 மணிக்கு ஞானாம்பிகை சமேத ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கல்யாணமும், இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறும். ஆயிர வைசிய சபையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us